×

உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு

சென்னை: உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. லிங்குசாமி புகார் குறித்து கமலிடம் பேசுவதற்காக குழு அமைக்க தயாரிப்பாளர் சங்கம் திட்டம் எனவும் குழு அமைத்த பிறகு விரைவில் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில் உத்தம வில்லன் திரைப்படம் 2015ம் ஆண்டு மே மாதம் வெளியானது. இந்த படத்தை தயாரிப்பதற்கு முன்பு லிங்குசாமி மற்றும் அவரின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரும் கமல்ஹாசனிடம் திரிஷ்யம் என்ற மலையாள திரைப்படத்தை திரையிட்டு, அப்படத்தை தயாரித்து இயக்கி, நடித்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளனர்.

ஆனால் கமல்ஹாசன் வேறொரு கதையை கூறி நடித்து கொடுத்த உத்தம வில்லன் திரைப்படம் தங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது எனவும் கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருந்தனர். அந்த தடையும் தங்களுக்கு படத்தை வெளியிடுவதற்கும், வியாபார தடையாகவும் இருந்தது எனவும் கமல்ஹாசனின் பிரச்சனையால் தங்கள் கஷ்டப்பட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கமல்ஹாசன் 8 மாத காலத்தில், ரூ.30 கோடியில் ஒரு படத்தை இயக்கி நடித்து கொடுப்பதாக தங்களுக்கு கடிதம் வழங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் 9 ஆண்டுகளாக அந்த படத்தை முடித்து கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார் எனவும், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நியாயம் பெற்று தர வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகார் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் விரைவில் குழு அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழு மூலமாக கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

The post உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Producers Association ,Kamal Haasan ,Utthamavillan ,Chennai ,Uthamavillain ,Kamal ,Lingusamy ,
× RELATED சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர்...